கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்துவருவதைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் பழனிசாமி இன்று காலை 11 மணியளவில் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா ஆட்டம்..!
நாள்தோறும் தமிழகத்தில் கொத்துக் கொத்தாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அரசு எடுக்கும் கையாளுகை நடவடிக்கைகள் பலனளிப்பதாகவும் தெரியவில்லை. அரசின் வேகமான மற்றும் தேவையான சேவையையும் தாண்டி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தமிழ்நாட்டில் உயர்ந்து வருவது கவலையளிப்பதாக உள்ளது.
முதல்வர் ஆலோசனை கூட்டம்..!
இந்நிலையில், கொரோனா தடுப்புப் பணிகள் குறித்தும், அதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காலை 11 மணியளவில் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்கும் கூட்டம் என்பதால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமான முடிவு குறித்துக் கூட பேசப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாவட்ட வாரியாக சிறப்பு முடிவுகள் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
from Exams Daily https://ift.tt/2UIXDoR
No comments:
Post a Comment